ETV Bharat / city

தமிழ்நாட்டில் 30,580 பேருக்கு கரோனா; இறப்பு 40 என உயர்வு!

author img

By

Published : Jan 23, 2022, 10:35 PM IST

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 30,580 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதியதாக 30 ஆயிரத்து 580 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் இறந்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் பிற மாவட்டங்களில் வேகமாக அதிகரித்து வருகிறது.

ஆர்டி-பிசிஆர் பரிசோதனை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஜன.23ஆம் தேதியான இன்று வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவல் அறிக்கையில், தமிழ்நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 638 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்த 30 ஆயிரத்து 567 நபர்களுக்கும், வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 13 நபர்களுக்கும் என 30 ஆயிரத்து 580 பேருக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சிகிச்சையில் உள்ளவர்கள்

மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 95 லட்சத்து 99 ஆயிரத்து 884 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் 31 லட்சத்து 33 ஆயிரத்து 990 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 2 லட்சத்து 954 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குணமானவர்கள் எண்ணிக்கை

மேலும், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 24 ஆயிரத்து 283 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 28 லட்சத்து 95 ஆயிரத்து 818 என உயர்ந்துள்ளது.

இறந்தவர்கள் எண்ணிக்கை

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 15 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 25 நோயாளிகள் என 40 நோயாளிகள் இறந்துள்ளனர். இதனால், இறந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்து 218 என உயர்ந்துள்ளது.

சென்னையில் குறையும் பாதிப்பு

கரோனா மூன்றாவது அறையில் வேகமாக உச்சத்தைத் தொட்ட சென்னையில் தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது கடந்த 24 மணிநேரத்தில் 6,383 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் கோயம்புத்தூரில் 3,912 நபர்களுக்கும், ஈரோட்டில் 1,220 நபர்களுக்கும், கன்னியாகுமரியில் 1,248 நபர்களுக்கும், கிருஷ்ணகிரியில் 1,010 நபர்களுக்கும் சேலத்தில் 1,074 நபர்களுக்கும் தஞ்சாவூரில் 1,123 நபர்களுக்கும் திருப்பூரில் 1,507 நபர்களுக்கும் என கரோனா வைரஸ் பரவல் பிற மாவட்டங்களில் வேகமாக அதிகரித்து வருகிறது.

பாதிப்பு விகிதம்

பரிசோதனை செய்பவர்களில் தினசரி பாதிப்பு தமிழ்நாட்டில் 19.8 சதவீதம் என அதிகரித்துள்ளது. இதில் திருப்பூர் 26.9 சதவீதம் எனப் பதிவாகி மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக கோயம்புத்தூரில் 26.6 %, ராணிப்பேட்டையில் 26.3 %, திருநெல்வேலியில் 26.1%, எனப் பிற மாவட்டங்களில் பாதிப்பு சத விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதிகமான பாதிப்புகள்

கரோனோ வைரஸ் தொற்று பாதிப்பினால் சென்னையில் 54 ஆயிரத்து 552 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோயம்புத்தூரில் 22,921 நபர்களும், செங்கல்பட்டில் 17 ஆயிரத்து 856 நபர்களும் எனச் சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு நாள்களாகத் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்தில் 101பேருக்கு கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.