ETV Bharat / city

தகுதித் தேர்வை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு - Architecture Council

தகுதித் தேர்வை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 10, 2022, 8:26 AM IST

சென்னை: பி.ஆர்க். படிப்பிற்கு நாட்டா தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என்று ஆர்கிடெக்சர் கவுன்சில் 2008ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவிற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக, ஆர்கிடெக்சர் கவுன்சில் 2017ஆம் ஆண்டு வெளியிட்ட விளக்க சுற்றறிக்கையில், பி.ஆர்க். படிப்பிற்கு நாட்டா தகுதி தேர்வு கட்டாயமில்லை. ஜே.இ.இ உள்ளிட்ட தகுதி தேர்வுகளின் அடிப்படையில் பி.ஆர்க். படிப்பில் சேர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 2017-18 ஆம் கல்வியாண்டில் பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கான விளக்க குறிப்புகளில் நாட்டா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறி, ஜே.இ.இ. தேர்வில் 390 மதிப்பெண்களுக்கு 226 எடுத்த அம்ருதா என்கிற மாணவிக்கு பி.ஆர்க். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதுதொடர்பான அந்த மாணவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையில் நாட்டா தேர்வு கட்டாயமில்லை என்ற பிறகும், விண்ணப்பத்தை நிராகரித்ததால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்க 2017ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.

நிலுவையிலிருந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். சுப்ரமணியன், பாதிக்கப்பட்ட மாணவிக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடும், 1 லட்ச ரூபாய் வழக்கு செலவு தொகையாகவும் சேர்த்து 4 வாரத்தில் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதோடு கல்வியின் கொள்கைகளை முடிவு செய்யும் பொறுப்பில் இருக்கும் பொறுப்பற்ற கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகளால், நம் இளைஞர்களின் வாழ்வு எப்படி பாதுகாப்பற்றதாக உள்ளது என்பதை இந்த வழக்கு படம்பிடித்து காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

கல்வி என்பது வாழ்வாதாரத்திற்கு தேவையான தகுதியை வழங்குவதற்கு மட்டும் அல்ல. சமூகத்தால் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதும் தான் என்று குறிப்பிட்ட நீதிபதி, சமீப நாட்களில் கல்வி வணிகமயமானது மட்டும் அல்லாமல், தகுதி இல்லாதவர்களின் கைகளிலும், அறிவுசார் ஆணவகாரர்களின் கைகளிலும் விழுந்துவிட்டதாக வேதனையை வெளிப்படுத்தினார்.

பெயருக்கு பின்னால் கல்வி தகுதியை பெற்றிருக்கும் இந்த ஆணவக்காரர்கள் எடுக்கும் முடிவுகளால், மாணவர்களின் வாழ்க்கை வீணாவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தோல்விக்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.