ETV Bharat / city

அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட தரமற்ற சக்கர நாற்காலி - அரசு பதிலளிக்க உத்தரவு - court news in tamil

கடந்த அதிமுக ஆட்சியின்போது தரமற்ற பேட்டரி சக்கர நாற்காலிகள் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஆறு வாரத்திற்குள் தமிழ்நாடு அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட தரமற்ற சக்கர நாற்காலி

author img

By

Published : Oct 4, 2021, 1:27 PM IST

சென்னை: தண்டுவட காயமடைந்தோர் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தசைச் சிதைவு, முதுகுத் தண்டுவட பாதிக்கப்பட்டவர்களுக்கு 2015 முதல் வழங்கப்பட்ட பேட்டரியால் இயக்கப்படும் சக்கர நாற்காலிகள் தரமற்றவை என்று தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மட்டுமே அந்த ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டதாகவும், வாங்கப்பட்ட பேட்டரியில் இயக்கப்படும் சக்கர நாற்காலிகள் தரமானவையா என்று சோதனை செய்து பார்க்க எந்த அறிவியல்பூர்வமான நடைமுறையும் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற சக்கர நாற்காலிகள் பயன்படுத்தியதால் மாற்றுத்திறனாளிகள் மேலும் பாதிக்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சக்கர நாற்காலிகள் பழுதுபார்ப்பதற்கு எந்தச் சேவை நிலையங்களும் உருவாக்கப்படவில்லை என மனுதாரர் அமைப்புத் தெரிவித்துள்ளது.

எனவே கடந்த ஆட்சியின்போது வழங்கப்பட்ட பேட்டரி சக்கர நாற்காலிகள், திரும்பப் பெற வேண்டும், இதனால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.

இனிமேல் வாங்கக்கூடிய சக்கர நாற்காலிகள் ஆய்வு செய்ய ஐஐடி அல்லது அண்ணா பல்கலைக்கழக வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு மனு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து தமிழ்நாடு அரசு ஆறு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வு: 12 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.