ETV Bharat / city

வாடிக்கையாளர்களை நல்ல முறையில் நடத்த எஸ்பிஐ மேலாளருக்கு உத்தரவு

வாடிக்கையாளர்கள், குடிமக்களின் பரிவர்த்தனைகள் மூலம் ஊதியம் பெறும் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்களை நல்ல முறையில் நடத்தும்படி விழிப்புணர்வு ஏற்படுத்த பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்பிஐ மேலாளருக்கு உத்தரவு
எஸ்பிஐ மேலாளருக்கு உத்தரவு
author img

By

Published : Nov 13, 2021, 5:04 PM IST

சென்னை: முத்திரைத்தாள் வாங்குவதற்காக, முத்திரைத்தாள் விற்பனையாளர்கள், அரசுக்குச் செலுத்தும் தொகைக்கு, பணம் கையாள்வதற்கான கட்டணம் வசூலிக்க பாரத ஸ்டேட் வங்கிக்கு தடைவிதிக்கக் கோரி முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், முத்திரைத்தாள் வாங்குவதற்காக அரசு கருவூலத்துக்குச் செலுத்தப்படும் தொகைக்குப் பணம் கையாளுவதற்கான கட்டணத்திலிருந்து விலக்களிக்க வேண்டும் எனக் கருவூல இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ள போதிலும், அதற்குப் பதிலளிக்காத வங்கி அலுவலர்களுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, அரசு அலுவலர்களின் கடிதங்களுக்கு மதிப்பளித்து பதிலளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதேபோல இந்த வழக்கில் வங்கி சார்பில் பதில் மனு தாக்கல்செய்த அலுவலர்கள், மனுதாரர்கள் வேறு வங்கிகளில் கணக்குத் தொடங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியதற்கும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, பொறுப்பற்ற முறையில் ஆணவத்துடன் நீதிமன்றத்துக்குப் பதிலளித்த சம்பந்தப்பட்ட அந்த அலுவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

வங்கி மேலாளருக்கு அறிவுரை

வாடிக்கையாளர்கள், குடிமக்களின் பரிவர்த்தனைகள் மூலம் ஊதியம் பெறும் வங்கி அலுவலர்கள், வாடிக்கையாளர்களை நல்ல முறையில், கவுரவமாக நடத்தும்படி விழிப்புணர்வு ஏற்படுத்த வங்கி பொது மேலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, ரிசர்வ் வங்கி உத்தரவில் அரசுடனான பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் எனக் கூறாததால், முத்திரைத்தாள் கொள்முதலுக்காகச் செலுத்தப்படும் தொகைக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவையும், இது தொடர்பான சுற்றறிக்கையையும் அனைத்துக் கிளைகளுக்கும் அனுப்ப பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.