ETV Bharat / city

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி பட்டறை!

author img

By

Published : Sep 10, 2020, 1:35 PM IST

மாநகராட்சி பள்ளிகளை சீர்மிகு மற்றும் மாதிரி பள்ளிகளாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக கணித ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறையை ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.

corporation
corporation

சென்னை: மாநகராட்சி பள்ளிகளை சீர்மிகு மற்றும் மாதிரி பள்ளிகளாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக கணித ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறையை ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.

மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் சீர்மிகு நகரத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட 12 திட்டங்களில் ஒன்று, சீர்மிகு, மாதிரி மாநகராட்சி பள்ளிகள் திட்டம். இத்திட்டத்தின் மூலம் மாநகராட்சி பள்ளிகளில் தரமான உட்கட்டமைப்பு உடைய வகுப்பறைகள், கற்றல் கற்பித்தலுக்கான ஸ்மார்ட் வகுப்பறைகள், பள்ளிகளின் மேம்பட்ட விளையாட்டு வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்துவதே முக்கியமான நோக்கம்.

அதனடிப்படையில், சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாநகராட்சி தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் கணித ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறையை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் துவக்கி வைத்தார்.

சென்னைப் பள்ளிகளை ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றுவதற்கான தொடக்கமாக அமையும் இத்திட்டத்தின் நோக்கம், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், பயிற்சிகளில் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயிற்சி பெற்று அதனை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் என, ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பள்ளிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.