சென்னை: கரோனா தொற்றுப் பரவலின் வேகம் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கிருமி நாசினி தெளித்தல், மக்களுக்கு முகக்கவசம் வழங்குதல், மருத்துவ முகாம்கள் அமைத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.
ஒரு தெருவில் இருந்து மற்றோரு தெருவுக்கு கரோனா நோய் பரவாமல் இருக்க மாநகராட்சி தனி கவனம் செலுத்தி வருகிறது. சென்னையில் மொத்தமுள்ள 39,537 தெருக்களில் 2,454 தெருக்களில் கரோனா நோய் தொற்று பரவி உள்ளது.
அதேசமயம் 1,591 தெருக்களில் 3, 5 எண்ணிக்கையில் கரோனா தொற்று நோயாளிகள் உள்ளனர். அடுத்தபடியாக 583 தெருக்களில் 6,10 நோயாளிகளும், 280 தெருக்களில் 10,25 நோயாளிகளும் உள்ளனர். சென்னையில் ஐந்து கரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 363 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை சென்னை மாநகராட்சியில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 94 விழுக்காடு பேர் முதல் தவணை தடுப்பூசியும், 73 விழுக்காடு பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தியுள்ளனர். சென்னையில் இதுவரை 15 -17 உள்பட்ட சிறார்களில் 66 விழுக்காடு பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சமூகம் உங்களை மன்னிக்காது' பிரியங்கா காந்தியை சாடிய பாஜக முன்னாள் எம்எல்ஏ மகள்