ETV Bharat / city

ஐஐடி கரோனா பரவல் ஒரு பாடம்! - chennai corona

சென்னை: முகக்கவசம் அணியாதவர்களுக்கு ஐஐடி கரோனா பரவல் ஒரு பாடம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

corona
corona
author img

By

Published : Dec 15, 2020, 12:51 PM IST

Updated : Dec 15, 2020, 3:46 PM IST

தண்டையார்பேட்டையில் இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராதாகிருஷ்ணன், ” ஐஐடியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது. உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் கரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை ஐஐடி மாறியுள்ளது. நேற்று வரை 104 மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 79 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு சென்னை ஐஐடி கரோனா பரவல் ஒரு பாடம். தொற்று பாதிக்கப்பட்ட ஐஐடி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு கரோனா அறிகுறி இருந்ததால், அங்குள்ள மாணவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது “ என்றார்.

ஐஐடி கரோனா பரவல் ஒரு பாடம்!

பின்னர் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “ சென்னை மாநகராட்சியை பொருத்தவரை இன்னும் இரண்டு நாட்களில், கரோனா பரிசோதனை எண்ணிக்கையில் 25 லட்சத்தை கடக்கப் போகிறோம். சென்னையில் மூன்றில் ஒருவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தொற்றுக்கு தடுப்பு ஊசி எல்லோருக்கும் கிடைக்க, மூன்று மாத காலம் வரை ஆகும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் தனி மனித இடைவெளியை குறைந்தது மூன்று மாதங்களுக்கு கடைபிடிக்க வேண்டும் “ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் மேலும் 79 பேருக்கு கரோனா உறுதி

Last Updated : Dec 15, 2020, 3:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.