சென்னையில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பெருந்தொற்று பரவலைத் தடுக்க சுகாதாரத் துறையும், மாநகராட்சியும் கிருமிநாசினி தெளிப்பது, மருத்துவ முகாம் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், கரோனா தொற்று குறைந்தபாடில்லை. அண்ணா நகர், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் போன்ற இடங்களில் பாதிப்பு அதிகரிக்கிறது.
ஏற்கனவே கோடம்பாக்கம் மண்டலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்து நிலையில், தற்போது அண்ணா நகர் மண்டலத்திலும் கரோனாவால் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது. சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 869 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 649 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 13 ஆயிரத்து 530 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 2,690 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அவை பின்வருமாறு:
கோடம்பாக்கம் - 15,105
அண்ணா நகர் - 15,056
ராயபுரம் - 13,204
தேனாம்பேட்டை - 12,989
தண்டையார்பேட்டை - 11,467
திரு.வி.க நகர் - 10,165
அடையாறு - 10,157
வளசரவாக்கம் - 8,206
அம்பத்தூர் - 9,228
திருவொற்றியூர் - 4,344
மாதவரம் - 4,707
ஆலந்தூர் - 4,810
சோழிங்கநல்லூர் - 3,623
பெருங்குடி - 4,216
மணலி - 2,098