சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஜனவரி 26 ஆம் தேதி வெளியிட்டுள்ளத் தகவலில், 'தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 762 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 29 ஆயிரத்து 958 நபர்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 18 நபர்களுக்கும் என 29 ஆயிரத்து 976 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 692 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
27 ஆயிரத்து 507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 73 ஆயிரத்து 185 என உயர்ந்துள்ளது.
மேலும், தனியார் மருத்துவமனைகளில் 26 பேர், அரசு மருத்துவமனைகளில் 21 பேர் என 47 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 359 என உயர்ந்துள்ளது.
மாவட்டங்கள்தோறும் பரிசோதனை செய்பவர்களில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், சென்னையில் தொற்று வேகம் மிகவும் குறைவாகப் பதிவாகி வருவதால் மாநிலத்தின் ஒட்டுமொத்த பரவல் எண்ணிக்கை குறைந்துள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிரஞ்சீவிக்கு கரோனா தொற்று உறுதி!