தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர்கள் தங்களைப் பணி நிரந்தம் செய்யக்கோரி வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிலுள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பல்வேறு மாவட்டங்களில் பல ஆண்டுகளாகப் பணியாற்றியும் அரசு தங்களைப் பணி நிரந்தரப்படுத்தாமல் உதாசீனப்படுத்துவதாகவும் அப்போது அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், வலிமையான தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் எனப் பல்வேறு திட்டங்களை தீட்டும் அரசு, தமிழ்நாட்டில் இளைஞர்களை விளையாட்டுகள் மூலம் வலிமையானவர்களாக மாற்றும் அரிய பணியினை செய்யும் தங்களுக்கு மட்டும் பணி நிரந்தர உத்தரவுகளை வழங்காமல் அரசு தாமதிக்கிறது எனவும் குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க: முடிவில்லா சோழர்கள்; முசிறியில் தடயங்கள்...