ETV Bharat / city

தென் மாவட்டங்களில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ்! - காங்கிரஸ்

சென்னை: வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேசப் பட்டியலை திமுகவிடம் காங்கிரஸ் கொடுத்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் போட்டியிட அக்கட்சி விரும்புவதாகத் தெரிகிறது.

congress
congress
author img

By

Published : Mar 8, 2021, 3:35 PM IST

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் என்பது குறித்து, திமுகவின் பேச்சுவார்த்தை குழுவுடன், காங்கிரஸ் கட்சி நாளை பேச இருக்கிறது. அதில் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு, நாளை மறுநாள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 40 தொகுதிகளின் உத்தேசப் பட்டியல் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 25 தொகுதிகள் அடையாளம் காணப்பட இருக்கின்றன. குறிப்பாக, தென் மாவட்டங்களில் அதிக இடங்களைப் பெற காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி, விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர், நாங்குநேரி, கடையநல்லூர், மதுரை தெற்கு, விருதுநகர், காரைக்குடி, பட்டுக்கோட்டை உள்ளிட்டத் தொகுதிகள் காங்கிரசிற்கு ஒதுக்கப்படும் என நம்புவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: மநீம கூட்டணி தொகுதிப்பங்கீடு! - இன்று மாலை அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.