ETV Bharat / city

கோட்டை முன்பு தொடர் உள் இருப்பு போராட்டம் - தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அறிவிப்பு - caa protest

சென்னை: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நடந்த குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

kda
author img

By

Published : Feb 27, 2020, 12:03 PM IST

தமிழ்நாடு ஒற்றுமை மேடை சார்பாக 'குடியுரிமை பாதுகாப்பு மாநாடு' என்ற தலைப்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் ஸ்டாலின், புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, இந்து குழுமம் தலைவர் என்.ராம், மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விசிக பொதுச்செயலாளர் வன்னியரசு, மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹருல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாநாட்டிற்கு பேராசிரியர் நன்னன் தலைமை தாங்கி உரை ஆற்றினார்.

இந்த மாநாட்டில் , குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். சிஏஏவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், கேரளா, புதுவையை பின்பற்றி, தமிழர்களின் குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கும் என்பிஆர்-ஐ தமிழ்நாட்டில் அமல்படுத்தக்கூடாது, என்பிஆரின் நீட்சியான தேசிய குடியுரிமை பதிவேட்டை (என்ஆர்சி)யை ஒருபோதும் ஏற்கமாட்டோம் எனும் கொள்கை முடிவையும் எடுக்க வேண்டும், சிஏஏ-வுக்கு எதிராக டில்லி ஷாஹின்பாக் போன்று வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் (சென்னை ஷாஹின்பாக்) போராட்டத்தின் நோக்கம் நிறைவேறும்வரை அவர்களோடு மக்கள் மேடை உறுதுணையாக இருக்கும்.

டெல்லியில் வன்முறை, அராஜகத்தில் இறங்கியுள்ள சங்பரிவாரங்கள் மீதும், காவல்துறையினர் மீதும் ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மக்களை திசைதிருப்பும் நடவடிக்கைகளை கைவிட்டு வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-யை எதிர்த்து மார்ச் மாதம் 3ஆவது வாரத்தில் 24 மணி நேர தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும். காலை 10 மணிக்கு தொடங்கும் அந்தப் போராட்டம் மறுநாள் காலை 10 மணிக்கு முடியும். சென்னையில் கோட்டை முன்பும், இதர ஊர்களில் மத்திய அல்லது மாநில அரசு அலுவலகம் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.