தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த கரோனா தொற்று, இரு தினங்களாக அதிகரித்துவருகிறது.
நேற்று முன்தினம்( ஜூலை27) 122 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அடுத்தடுத்த தினங்களில் 139ஆகவும், 164ஆகவும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாம்ல கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று 164ஆக இருந்த தொற்று பாதிப்பு, 179 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே கேரளாவில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், அம்மாநில அரசு வார இறுதி தினங்களான சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இதனிடையே தமிழ்நாட்டிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்னும் கேள்வி எழுந்துள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை(ஜூலை 30) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. அதில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகலாம்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் மேலும் 1,785 பேருக்கு கரோனா