சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பிறகு பதிலுரையில் பேசிய அமைச்சர் தங்கமணி, ”மதுவிலக்கை பொறுத்தவரை மக்களாக பார்த்து திருந்தாவிட்டால் எவ்வளவு பெரிய சட்டம் இயற்றினாலும் செல்லுபடி ஆகாது. முழு மதுவிலக்கிற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 6,215 மதுக்கடைகள் இருந்த நிலையில் தற்போது 5,299 மதுக்கடைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.
மதுப்பழக்கத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட வேண்டும். மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையைவிட அதிகமாக விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். படிப்படியாக முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்படும் “ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சிக்காலத்தில் மதுபாட்டிலில் திருக்குறளையா அச்சிட்டிருந்தீர்கள் ? - அமைச்சர் ஆவேசம்!