சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பரங்கிமலை முதல் எம்ஜிஆர் சென்டரல் ரயில் நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை இன்று (செப் 9) முதல் தொடங்கப்பட்டது. இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டுவருகிறது.
முன்னதாக இரவு 8 மணி வரை மட்டுமே ரயில் சேவை இயக்கப்பட்டு வந்த நிலையில், பொதுமக்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் கோரிக்கையை ஏற்று, நாளை(செப்.10) முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மக்கள் அதிகம் பயணம் மேற்கொள்ளும் நேரங்களில் 5 நிடத்துக்கு ஒரு ரயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை(செப்.10) முதல் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக பரங்கிமலை ரயில் நிலையத்திற்கும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்துக்கும் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.