ETV Bharat / city

நோ அரியர்... அரியர் வைத்திருந்தால், ஆல் பாஸ் - முதலமைச்சர் அதிரடி! - cm statement on higher education arrear

cm statement on higher education arrear
cm statement on higher education arrear
author img

By

Published : Aug 26, 2020, 2:25 PM IST

Updated : Aug 26, 2020, 2:56 PM IST

14:12 August 26

சென்னை: பட்டம், பட்டயப் படிப்பில் இறுதிப்பருவ பாடங்களைத் தவிர பிற பருவ பாடங்களில் அரியர் வைத்திருந்தால் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா நோய்க்கிருமி தொற்று காரணமாக, உயர் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. 

முதலாம், இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்கும், பலவகை தொழில்நுட்ப பட்டயப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கும், முதுகலை பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், இளநிலை பொறியியல் பட்டப் படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், முதுநிலை பொறியியல் பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.  

அதேபோன்று, எம்.சி.ஏ. முதலாம், இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்களித்து, அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல 23.7.2020 அன்று உத்தரவிட்டிருந்தேன். அதன் அடிப்படையில், உயர் கல்வித்துறை 27.7.2020 அன்று விரிவான வழிகாட்டுதல்களை வழங்கி அரசாணை வெளியிட்டது.  

தற்போது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவ பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும். இதுகுறித்து விரிவான ஒரு அரசாணையை வெளியிட உயர்கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” என அதில் கூறியுள்ளார். 

Last Updated : Aug 26, 2020, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.