ETV Bharat / city

'இலங்கைத் தமிழர்களுக்கு உதவத் தயார்': மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் போனில் பேசிய முதலமைச்சர் - பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
author img

By

Published : Apr 7, 2022, 6:53 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று(7-4-2022) மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, "இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தவித்துவரும் நிலையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் வசிக்கும் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு அத்தியாவசிப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம், தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட்களை உணவின்றித் தவிக்கும் தமிழர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் விநியோகிக்க உரிய அனுமதியையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதேபோல், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உறுதி அளித்தார்.

இதையும் படிங்க: 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 7,876 மாணவர்கள் சேர்க்கை - முதலமைச்சர் ஸ்டாலின்

For All Latest Updates

TAGGED:

cm letter
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.