ETV Bharat / city

'பின்தங்கியுள்ள மாவட்டத்தை முன்னோடியாக்க வேண்டும்' - ஆட்சியர்களின் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உரை - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

எந்தெந்த துறைகளில், எந்தெந்த திட்டங்களை செயல்படுத்துவதில் தங்களின் மாவட்டம் சற்று பின்தங்கி உள்ளதோ, அவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி அந்த மாவட்டத்தை மாநிலத்தின் முன்னோடி மாவட்டங்களில் ஒன்றாக ஆக்கிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆட்சியர்களின் மாநாட்டில் ஸ்டாலின்
ஆட்சியர்களின் மாநாட்டில் ஸ்டாலின்
author img

By

Published : Mar 11, 2022, 11:01 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டின் (2022) இரண்டாம் நாள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 11) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை பல்வேறு துறைகள் மூலமாக நிதிகளை ஒதுக்கி அரசு செயல்படுத்தினாலும், அது சில குறிப்பிட்ட பகுதிகளில் தேவையான தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை என்று நமக்குத் தெரிய வருகிறது.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி

எனவே, நீங்கள் எந்தெந்த துறைகளில், எந்தெந்த திட்டங்களை செயல்படுத்துவதில் உங்கள் மாவட்டம் சற்று பின் தங்கி உள்ளதோ அவற்றில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தி உங்கள் மாவட்டத்தை மாநிலத்தின் முன்னோடி மாவட்டங்களில் ஒன்றாக ஆக்கிட வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

மாவட்ட நிர்வாகத்தின் முன்னுரிமைகள் (Priorities) மாநில அரசின் முன்னுரிமைகளோடு ஒன்றியதாக இருக்க வேண்டும். மாநில அரசின் பரந்துபட்ட நோக்கமாக இருக்கக்கூடிய 'Inclusive Growth' என்னும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியானது திட்டச் செயலாக்கத்திலும் வெளிப்பட வேண்டும்.

குறிப்பாக, விளிம்பு நிலை மனிதர்கள், சிறுபான்மையினர், பட்டியலின - பழங்குடி மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு

'தொடர்ந்து ஆய்வு செய்யுங்கள்'

நல்ல திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் நீங்கள் மேற்கொள்ளும் அதே சமயத்தில், மக்களை உடனடியாக பாதிக்கக்கூடிய சில குறிப்பிட்ட அடிப்படை அரசுப் பணிகளிலும், உதாரணமாக, பட்டா மாறுதல், சான்றிதழ்கள் வழங்குதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் – அதிலும் குறிப்பாக நீர்நிலைப் புறம்போக்குகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்றவற்றில் நீங்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

'Inspection' என்று சொல்லக்கூடிய நேரடி ஆய்வுகள் - ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மாணவர் விடுதிகள், அங்கன்வாடிகள், நியாயவிலைக் கடைகள் ஆகியவற்றை நீங்கள் கட்டாயம் தொடர்ந்து நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும்.

அப்போது தான் மக்களுக்கு, மாணவர்களுக்கு, எளியோர்களுக்கு என்ன வகையான சேவை எந்தத் துறையால் என்ன தரத்தில் வழங்கப்படுகிறது என்பதை நீங்கள் உணர முடியும் - குறைபாடுகள் இருந்தால் அதையும் திருத்த முடியும்.

ஊட்டச்சத்தை உறுதிப்படுத்தவும்

நம் மாநிலத்தில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுகிறது. உதாரணமாக, தர்மபுரி மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் 36 விழுக்காடு என்று ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. ICDS என்னும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தை நீங்கள் கவனமுடன் செயல்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு பொருளாதார அளவில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், ஊட்டச்சத்து பட்டியலில் 19-வது இடத்தில் உள்ளது என்பதை நான் மிகுந்த வருத்தத்துடன் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதனை சரி செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

திடமான திட்டமிடல் வேண்டும்

பேரிடர் காலங்களில் மக்களைக் காப்பதற்கும், அந்த நேரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முன்னதாகவே திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, இறந்தவர்களின் உடல்களை மயானங்களுக்கு எடுத்துச் செல்ல ஒரு சிறிய நடைபாலம் இல்லை என்ற நிலை கடந்த வெள்ளத்தின்போது தொலைக்காட்சி வாயிலாக சில மாவட்டங்களில் நாம் பார்த்தோம், வேதனைப்பட்டோம்.

அதே காரணத்தால், பள்ளிக் குழந்தைகள் இடுப்பளவு தண்ணீரில் பள்ளிக்குச் செல்லும் நிலையையும் பார்த்தோம். இதுபோன்ற இடங்களை நீங்கள் பட்டியலிட்டு அக்குறைகளை போக்க வேண்டும். அதுதான் முக்கியமான முழுமையான நல்ல நிர்வாகமாக அமைந்திட முடியும்.

கடன் திட்டங்களையும் கண்காணிக்கவும்

அடுத்தபடியாக இரண்டு முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அரசாணைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி துறையின் மூலமாக 'அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்' மற்றும் வேளாண்மைத் துறையின் மூலம் 'கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்', இந்த இரண்டு பெரும் திட்டங்களும் லட்சக்கணக்கான கிராம மக்களைச் சென்றடையும் திட்டங்களாக இது அமைந்திருக்கிறது.

அதே சமயம், பல்வேறு துறைகளின் தேவைகளை ஒன்றிணைத்து நிறைவேற்றவேண்டிய திட்டமும் ஆகும். மாவட்டத்தின் ஆண்டுக்கடன் திட்டம் என்னும் 'Annual Credit Plan' முறையாக செயல்படுத்துவதை நீங்கள் கண்காணிக்க வேண்டும்.

அதன்மூலம், மாதாந்திர வங்கியாளர் கூட்டத்தை நடத்தி கல்விக்கடன், சுயஉதவி குழுக்களுக்கான கடன், விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன், தொழில் முனைவோர்களுக்கான கடன் ஆகியவை முறையாக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலிலும் திட்ட இலக்கின்படி வழங்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: இதுதான் திராவிட மாடலா?: தாறுமாறாக விமர்சிக்கும் ஹெச்.ராஜா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.