ETV Bharat / city

பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

author img

By

Published : Sep 29, 2021, 9:16 AM IST

பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்குமாறும், கூட்டம் கூடக்கூடிய இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்
முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான வழிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. "கரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல், கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கு, தொற்றால் பாதிப்பிற்குள்ளானவர்கள் இருக்கும் பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள், அத்தியாவசியப் பொருள்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதியில்லை.

அபராதம்

கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும். கரோனா தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும்.

கவனம் தேவை

பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்குமாறும், கூட்டம் கூடக்கூடிய இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், உரிய கட்டுப்பாடுகளால் மட்டுமே கரோனா 3ஆவது அலையை தவிர்க்க இயலும் என்பதை உணர்ந்து அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைத்து வணிக நிறுவனங்களும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும்" என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: நவம்பரில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.