ETV Bharat / city

முதலமைச்சர் ஸ்டாலின் நலமாக உள்ளார்- காவேரி மருத்துவமனை அறிக்கை - KAUVERY HOSPITAL

முதலமைச்சர் முக ஸ்டாலின் நலமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் நலமாக உள்ளார்- காவேரி மருத்துவமனை அறிக்கை

author img

By

Published : Jul 15, 2022, 1:20 PM IST

சென்னை: கடந்த 12 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடற்சோர்வு ஏற்பட்டதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து தனது வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். இதனைத்தொடர்ந்து சென்னை காவேரி மருத்துவமனையில் நேற்று அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், முதலமைச்சர் ஸ்டாலின் கோவிட் பாதிப்பிலிருந்து விரைந்து குணமடைந்து வருகிறார். மேலும் சில நாட்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் மேலும் சில நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதலமைச்சர் உடல்நலம் குறித்து தொலைபேசி மூலம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.