ETV Bharat / city

சப்பரத்தில் சிக்கி உயிரிழந்த நாகை தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

author img

By

Published : Apr 30, 2022, 10:26 AM IST

நாகப்பட்டினம் திருச்செங்காட்டாங்குடி சப்பரத் திருவிழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

CM Stalin Condolence Nagapattinam Chariot Accident Death Victim

சென்னை: நாகப்பட்டினம் திருச்செங்காட்டாங்குடி உத்திராபதிஸ்வரர் கோயிலின் சப்பரத் திருவிழாவின்போது, விபத்தில் சிக்கி தொழிலாளர் தீபராஜன் என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "நாகப்பட்டினம் மாவட்டம், திருச்செங்காட்டாங்குடியில் இன்று (ஏப். 30) அதிகாலை நடைபெற்ற சப்பரத் திருவிழாவில், சப்பரத்திற்கு முட்டுக்கட்டை போடும்போது அதிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த திருக்கண்ணபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் தீபன்ராஜ் மீது சப்பரம் ஏறியுள்ளது.

இவ்விபத்தில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூபாய் ஐந்து லட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தஞ்சாவூரை தொடர்ந்து நாகையிலும்... சப்பர சக்கரத்தில் சிக்கி தொழிலாளர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.