சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை , தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் இணைந்து விளையாட்டு வீரர்களுக்கான கரோனா நோய்த்தொற்று தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கு அரசின் சிறப்பு ஊக்கத்தொகையினையும் முதலமைச்சர் வழங்கினார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், "ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்க உள்ள 6 வீரர்களுக்கு தலா 5 லட்சம் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், "ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரருக்கு 3 கோடி ரூபாயும், வெள்ளி வெல்லும் வீரருக்கு 2 கோடி ரூபாயும், வெண்கலம் வெல்லும் வீரருக்கு 1 கோடி ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்" என்று அறிவித்தார்.
இதையும் படிங்க; அதிமுகவுக்கு செந்தில் பாலாஜி கொடுத்த 'ஷாக்': இப்போது ஸ்டாலின் குட் புக்கில்...!