முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிலாடி நபி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன் நபி திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த மீலாதுன் நபி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
"உங்கள் உள்ளத்தில் எவருக்கும் தீமை நாடாமல் வாழ முடியும் என்றால், அவ்விதமே வாழுங்கள். இதுவே என் வழிமுறையாகும். எவர் என் வழிமுறையை நேசிக்கிறாரோ அவர் என்னையே நேசித்தவர் ஆவார்" என்ற இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளை மனதில் நிறுத்தி, மக்கள் நற்சிந்தனையுடன் அறவழியைப் பின்பற்றி வாழ்ந்திடல் வேண்டும்.
இஸ்லாமியர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது.
எல்லா நல்ல செயல்களும் தர்மமாகும் என்றுரைத்த இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த இந்நாளில், உலகில் அன்பு பெருகி, அமைதி தவழ்ந்து, சகோதரத்துவம் தழைத்திட வேண்டும் என்று வாழ்த்தி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய மீலாதுன் நபி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: சிறந்த தருணத்தில் உங்களுடன் இருப்பது மகிழ்ச்சி - தந்தை கமலுக்கு ஸ்ருதி வாழ்த்து!