சென்னை: தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
மேலும் இந்த ஊரடங்கு நீட்டிப்பில் தளர்வுகள் அளிப்பது, கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூலை 16) அரசு உயர் அலுவலர்களோடு ஆலோசனை மேற்கொள்கிறார்.
எவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு
இதில் திரையரங்குகள், நட்சத்திர விடுதியில் இயங்கும் மதுக்கூடங்கள் ஆகியவை இயங்க அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த கல்வி ஆண்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க இதுவரை அனுமதி அளிக்கப்படாததால் கல்வி நிலையங்கள் திறப்பது குறித்தும் முதலமைச்சர் விரிவாக ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி உடனான ஆலோசனைக் கூட்டத்திலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இதையும் படிங்க: 'நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும்' - கமல் ஹாசன்