தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் உள்ள இஸ்லாமியப் பெருமக்களுக்கு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகளும் பரிசுப் பொருட்களும் வழங்கினார்.
தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜானை முன்னிட்டு கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்குவார்.
இந்த முறை கரோனா தொற்றால் எளிமையான முறையில் இந்த விழா நடைபெற்றது. அப்போது முதலமைச்சருடன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இருந்தார்.