சென்னை : சட்டப்பேரவையின் இறுதி நாளான இன்று (செப்.13) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரை அடகு வைத்து, அதன் மூலம் பெற்ற கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும். இந்த நகைக்கடன் தகுதியின் அடிப்படையில் மட்டுமே தள்ளுபடி செய்யப்படஉள்ளது.
அந்த வகையில், கடனை திருப்பிச் செலுத்த முடியாத உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும். அதற்காக கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்கள் குறித்து 51 விதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
எனவே, மக்கள் கூட்டுறவு வங்கிகளில் நகை அடமானம் வைத்து விபரங்கள், ரசீதுகள் ஆகியவற்றை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அத்துடன் பயனாளிகளின் கேஓய்சி, குடும்ப அட்டை விவரங்கள் குளருபடியில்லாமல் தயாராக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் நகை அடகு வைத்திருந்தால் தள்ளுபடியில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க : நகைக்கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!