ETV Bharat / city

கரோனாவை அகற்ற பொது மக்கள் உதவிட வேண்டும் - முதலமைச்சர் வேண்டுகோள் - கரோனா

கரோனா எனும் பெருந்தொற்றை முற்றிலும் அகற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் உதவிட வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

CM
CM
author img

By

Published : Jul 31, 2021, 5:00 PM IST

சென்னை: பொது மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, கரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* ஒரு வார காலத்திற்கு, தினந்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல்வேறு துறைகள் மூலம் ஒருங்கிணைந்து நடத்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

* துண்டு பிரச்சாரங்கள், சிற்றேடுகள், டிவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வளைதளங்களிலும் தொலைக்காட்சி நேர்காணலிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

* கடை வீதிகள், இரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் வரும் மக்களிடையே முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

* வியாபாரிகள் நலச்சங்கங்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

* தனியார் மருத்துவமனைகள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

* மாணவர்களுக்கிடையே குறும்பட போட்டிகள், ஓவியப்போட்டிகள், கரோனா விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்குதல், எப்.எம் ரேடியோ மூலம் கேள்வி பதில் நிகழ்ச்சிகள், மீம்ஸ் உருவாக்குதல் போன்றவற்றை நடத்தவும், கிராமிய கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேண்டும்.

* நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்க வேண்டும்.

* கிராம அளவில் / வார்டு அளவில் / மண்டல அளவில் 100 சதவிகிதம் கரோனா தடுப்பூசியை செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை அந்தந்த மாவட்டங்களில் கெளரவித்து பரிசுகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

* கரோனா மேலாண்மைக்கான வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவும், மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென முதலமைச்சர் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே:அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து- முதலமைச்சர் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.