ETV Bharat / city

எரிசக்தித் துறை சார்பில் ரூ.258 கோடி மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் - சென்னை

எரிசக்தித் துறை சார்பில் ரூ.161.38 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் 51 துணை மின் நிலையங்களில் ரூ.97.56 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 52 எண்ணிக்கையிலான மின் மாற்றிகளின் திறன் உயர்த்துதல், ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

எரிசக்தித் துறை சார்பில் 258 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்

author img

By

Published : Aug 16, 2022, 7:00 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் தடையின்றி மின்சாரம் கிடைக்கச்செய்யும் நோக்குடன், அதிகரித்து வரும் மின் தேவைக்கு ஏற்றவாறு தற்போது உள்ள மின்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டும், தரம் உயர்த்தப்பட்டும் மின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டும், சரியான மின் அழுத்தத்துடன் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

சீரான மின் விநியோகத்திற்கு கூடுதல் துணை மின் நிலையம் அமைப்பது அவசியமாகும் என்பதைக்கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்கள் அமைத்தல், இயக்கத்தில் உள்ள துணை மின் நிலையங்களின் திறனை மேம்படுத்தும்விதமாக கூடுதல் மின் மாற்றிகள் அமைத்தல் ஆகியப்பணிகளை தமிழ்நாடு மின் தொடரமைப்புக்கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவாரூர், தூத்துக்குடி மாவட்டங்களில் 147 கோடியே 97 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பதினொன்று புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள் மற்றும் 13 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து 33 கி.வோ துணை மின் நிலையங்கள் என மொத்தம் 161 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 16 துணை மின் நிலையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

எரிசக்தித்துறை சார்பில் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மேலும், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள 51 துணை மின் நிலையங்களில் 602 எம்.வி.ஏ அளவிற்கு திறன் அதிகரித்து 97 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 52 எண்ணிக்கையிலான மின் மாற்றிகளின் செயல்பாட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

மேற்கூறிய 258 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மின்திட்டங்கள் மூலம் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாயப்பெருமக்களுக்கு தரமான, தடையில்லா மின்சாரம் வழங்கிட வழிவகை ஏற்படும்.

இந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, தலைமைச்செயலாளர் முனைவர் இறையன்பு, எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைவர் / தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டி செலவு விவரங்களை யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம் - அமைச்சர் மெய்யநாதன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.