ETV Bharat / city

விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் - 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 70ஆவது பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 25) கொண்டாடப்படுவதையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சியினர் பலர் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்தனர்.

Etv Bharatவிஜயகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்  ஸ்டாலின்

author img

By

Published : Aug 25, 2022, 3:19 PM IST

தேமுதிக தலைவரும், தமிழ் சினிமாவின் சிறந்த கதாநாயகனாக திகழ்ந்தவருமான விஜய்காந்த் அவரது 70ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். விஜயகாந்த் ஒரு சிறந்த நடிகராகவும், முக்கியமான அரசியல்வாதியாகவும் தமிழ் நாட்டின் மக்களின் மனதில் பதிந்தவர். இருப்பினும் சில ஆண்டுகளாக உடல்நலக் குறைபாட்டால் பொது நிகழ்ச்சிகளில் பேச முடியாமல் உள்ளார்.

இவரின் திரைப்படங்களில் அனல் தெறிக்க வசனங்களைத்தெறிக்கவிட்டவர், தற்போது உடல்நிலை குன்றி உள்ளதால் இவரது ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் உற்சாகம் இல்லாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அவரது 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின்: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த் அவர்களுக்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உடல் நலம் பெற்று - துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்’ எனக்கூறி அவரது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

  • என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான @iVijayakant அவர்களுக்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உடல் நலம் பெற்று - துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!

    — M.K.Stalin (@mkstalin) August 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனைத் தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி, ‘தேமுதிக நிறுவனர் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் முழு உடல் நலத்தோடு மக்கள் சேவையை இன்னும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்’ என அவரது ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவரது வாழ்த்துகளைக் கூறினார். இது குறித்து அவரது ட்விட்டரில், ‘விஜய்காந்த் அவர்கள் நல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கட் பணியாற்றிட இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தனது 71ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் எனதருமை நண்பரும், கேப்டன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனருமான அன்புச் சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! ’ எனத் தெரிவித்தார்.

  • தனது 71-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் எனதருமை நண்பரும், கேப்டன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனருமான அன்புச் சகோதரர் திரு.விஜயகாந்த் @iVijayakant அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

    — O Panneerselvam (@OfficeOfOPS) August 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது ட்விட்டரில், ‘இன்று பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் மரியாதைக்குரிய கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், விஜய்காந்த் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன்,எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்’ என அவரது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

  • இன்று பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் மரியாதைக்குரிய கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், @iVijayakant அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன்,எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். pic.twitter.com/QPQLoKDIlV

    — Edappadi K Palaniswami (@EPSTamilNadu) August 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ‘70ஆவது பிறந்தநாள் காணும் தேமுதிக நிறுவனத்தலைவர், நண்பர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், மக்கள் பணியாற்றிட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ எனக் கூறினார்.

  • 70வது பிறந்தநாள் காணும் தே.மு.தி.க நிறுவன தலைவர், நண்பர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், மக்கள் பணியாற்றிட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @iVijayakant

    — TTV Dhinakaran (@TTVDhinakaran) August 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் வித்தியசமாக விஜய்காந்த் நடித்த படங்களின் பெயரை குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தார். அதில், "வானத்தைப் போல" பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், "மரியாதை"யையும் பெற்று "புலன் விசாரணை" செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் "சகாப்தமாக" "கேப்டனாக" "மரியாதை"யுடன் "நெறஞ்ச மனசு"டன் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ எனத் தெரிவித்து இருந்தார்.

  • "வானத்தைப் போல" பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், "மரியாதை"யையும் பெற்று "புலன் விசாரணை" செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் "சகாப்தமாக" "கேப்டனாக" "மரியாதை"யுடன் "நெறஞ்ச மனசு"டன் வலம் வந்து கொண்டிருக்கும்(1/2)@iVijayakant#HBDVijayakant
    (File Photo) pic.twitter.com/qPzcQYqWDX

    — Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க:தமிழ்நாடு முதலமைச்சர்தான் எங்கள் குலசாமி.. ஆவடி சிறுமியின் பெற்றோர் உருக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.