ETV Bharat / city

பக்ரீத் திருநாள் - முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து! - பக்ரீத்

சென்னை: பக்ரீத் திருநாள் நாளை (ஆகஸ்ட் 1) கொண்டாடப்படுவதையொட்டி இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

wish
wish
author img

By

Published : Jul 31, 2020, 10:55 AM IST

இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தியில், “இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்பதை பறைசாற்றும் வகையில், இறைத்தூதர் இப்ராஹிம், இறை கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை இறைவனுக்காக தியாகம் செய்ய துணிந்ததை நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் இஸ்லாமியப் பெருமக்களால் கொண்டாடப்படுகிறது.

இறை உணர்வோடும், தியாகச் சிந்தனையோடும் இஸ்லாமியப் பெருமக்களால் கொண்டாடப்படும் இத்திருநாளில், அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தியாகத் திருநாளில், திருக்குரான் போதிக்கும் உயரிய நெறிமுறைகளான அன்பு, அமைதி, மனிதநேயம் ஆகியவற்றை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, அன்புடனும், சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்“. இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பக்ரீத் பண்டிகை: மெரினாவில் சிறப்பு தொழுகைக்கு அனுமதிகோரி மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.