தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சென்னை மதுரவாயலை அடுத்த நொளம்பூரில் 2 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் வருவாய் வட்டாட்சியர் குடியிருப்பு, பெரம்பலூரில் 2 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பென்ஜமின், அரசு தலைமை கொறடா எஸ்.ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அரசு குழந்தைகள் காப்பகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர்!