முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1 கோடியே 43 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையக் கட்டடம், திருப்பூர் மாநகரில் 59 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம், குடியிருப்பு ஆகியவற்றை காணொலி மூலம் திறந்துவைத்தார்.
மேலும், 11 கோடியே 59 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 17 காவலர் குடியிருப்புகள், 5 காவல் நிலையங்கள், 5 காவல் துறை கட்டடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடம் ஆகியவற்றையும் அவர் திறந்துவைத்தார்.
இதேபோன்று, நிதித் துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் - அன்னூர், பெரம்பலூர் மாவட்டம் - ஆலத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் - கலசப்பாக்கம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் மூன்று கோடியே 13 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்கு சார் கருவூல அலுவலகக் கட்டடங்கள், சென்னை – நந்தனம், அம்மா வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக வளாகத்தில் 10 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் இரண்டு தளங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.
![நிதித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7636793_cm-image.jpg)
இந்நிகழ்ச்சிகளில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், உடுமலை கே. ராதாகிருஷ்ணன், தலைமைச்செயலர் சண்முகம், காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் சைலேந்திர பாபு, அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு ஒத்திவைப்பு!