இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், தென்காசி மாவட்டம், மேலூர் கிராமத்தை சேர்ந்த மத்திய ரிசர்வ் காவல் படையில் 92 ஆவது படைப்பிரிவுக் காவலராகப் பணியாற்றி வந்த சந்திரசேகர் என்பவர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
சந்திரசேகரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனது இன்னுயிரை தியாகம் செய்த, சந்திரசேகர் குடும்பத்திற்கு
இருபது லட்சம் ரூபாய் நிதியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பாதுகாப்புப்படை வீரர் சந்திரசேகரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது “ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஜம்முவில் உயிரிழந்த தமிழக வீரர்: இறுதி அஞ்சலி செலுத்த செங்கோட்டையில் ஏற்பாடு!