ETV Bharat / city

‘குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசங்கள்!’ - முதலமைச்சர்  பரிசீலனை - எடப்பாடி பழனிசாமி

சென்னை: குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் விலையில்லா முகக்கவசங்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

speech
speech
author img

By

Published : Jun 2, 2020, 6:12 PM IST

சென்னையில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில், மண்டல வாரியாக கரோனா பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ”சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் நான்காயிரம் பேருக்கு கரோனா கண்டறிதல் சோதனை செய்யப்படுகிறது. நாட்டிலேயே அதிகளவாக, தமிழ்நாட்டில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 56 விழுக்காடாக இருக்கிறது. இறந்தவர்களின் விகிதம் 0.8 விழுக்காடாக உள்ளது.

மக்களின் கோரிக்கையை ஏற்று மாநகரப் பகுதிகளில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. எனவே, மக்கள் அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும். அடுத்தக்கட்டமாக, குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் விலையில்லா முகக்கவசங்கள் வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருகிறது“ என்றார்.

குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விலையில்லா முகக்கவசம்!

மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்த முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே தன் மீது குற்றம்சாட்டி வருவதாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இதுவரை 2.71 லட்சம் பிசிஆர் கருவிகள், 43 பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்தது, மத்திய அரசு வழங்கியது, தன்னார்வலர்கள் வழங்கியது என 12 லட்சத்து 55 ஆயிரத்து 216 பிசிஆர் கருவிகள் அரசுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். இந்தியாவிலேயே அதிக வெண்டிலேட்டர் கருவிகள் இங்குதான் உள்ளது என்று தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, தேவையான அளவு வெண்டிலேட்டர்கள் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது தவறு என்றும் சாடினார்.

இதையும் படிங்க: சமயத் தலைவர்களுடன் தலைமைச் செயலர் நாளை ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.