ETV Bharat / city

அரசு கள்ளர் பள்ளிகளில் பயின்று ''டாக்டருக்கு'' படிக்கும் மாணவிகளை முதலமைச்சர் நேரில் அழைத்து வாழ்த்து!

author img

By

Published : May 6, 2022, 10:43 PM IST

அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயின்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற 2 மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்கி வாழ்த்தினார்.

தலைமைச் செயலகம், cm stalin ,7.5% இட ஒதுக்கீடு,
அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயின்று மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற மாணவிகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத்தொகுப்பு வழங்கி வாழ்த்து.

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பயின்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில், மருத்துவம் பயிலும் மாணவிகளைச் சந்தித்தார்.

கன்னியாகுமரியில் உள்ள ஶ்ரீ மூகாம்பிகா இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் MBBS மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற்ற மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம், அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி செல்வி S. தங்கபேச்சி மற்றும் குன்றத்தூரில் உள்ள மாதா பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் BDS பல்மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற்ற மதுரை மாவட்டம், செக்கானூரணி, அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி செல்வி S. புவனேஸ்வரி ஆகிய மாணவிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்கி, வாழ்த்தினார்.

பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் ஆ. கார்த்திக், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் முனைவர் மா.மதிவாணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த மாணவி சிந்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.