ETV Bharat / city

15 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chennai weather forecast
chennai weather forecast
author img

By

Published : Oct 18, 2020, 2:28 PM IST

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் 15 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் குறிப்பாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், பெரம்பலூரில் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவித்துள்ளது.

மேலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையும், அதன் புறநகர் பகுதிகளிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக திருவண்ணாமலையில் 10 சென்டி மீட்டர் மழையும், சென்னை பெரம்பூர் பகுதியில் 6 சென்டி மீட்டர் மழையும், திருவள்ளூர் பகுதியில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை, “அக்டோபர் 19ஆம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக அக்டோபர் 18ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியிலும், அக்டோபர் 19ஆம் தேதி மத்திய கிழக்கு வங்க கடலும், அதனையொட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்றிருக்கும்.

அதேபோல, அக்டோபர் 20ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக் கடலும், அதையொட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகள், அந்தமான் கடல் வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளிலும், அக்டோபர் 21ஆம் தேதி ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.