மாணவர்கள் தேர்வினை பயமின்றி எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து பிரதமர் மோடி ’பரிக்ஷா பே சார்ச்சா’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே இன்று உரையாற்றினார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள், பிரதமரின் பேச்சைக் கேட்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதன்படி, அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவிகள் ஆர்வமுடன் பிரதமரின் அறிவுரைகளைக் கேட்டனர். பிரதமர் பேச்சு இந்தியில் இருந்ததால் அதனை மொழிபெயர்த்து தமிழில் விளக்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவிகள், பிரதமர் மோடியின் பேச்சு எங்களுக்கு தேர்வின் மீது இருந்த பயத்தினை போக்குவதாக அமைந்துள்ளது எனவும், தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் எவ்வித அச்சமுமின்றி, மன அழுத்தமின்றி தேர்வினை எதிர்கொள்ள பயனுள்ளதாக இருந்தது எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பட்ஜெட் 2020-21: அல்வா கிண்டிய நிதி அமைச்சர்