சென்னை : வேப்பேரி காவல் ஆணையர் அலுவல கலந்தாய்வு கூடத்தில் காவலர்கள் குடும்பத்தினருக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல் துறையினருக்கு என சிலிக்கான் வேலி என்ற தனியார் வங்கியின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராச்சாமி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மனிதாபிமானத்துடன் நடத்துக
பின்னர் பேசிய கலாநிதி வீராச்சாமி, கரோனா தொற்று காலத்தில் மருத்துவத் துறையினரைப் போல் 24 மணி நேரமும் ஓய்வின்றி பணியாற்றியவர்கள் காவல்துறையினர் என்றார். மேலும், கரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் பலர் வேலையிழந்து தவித்து வருவதாகக் கூறிய அவர், ஊரடங்கால் வேலையிழந்து சிறு சிறு தவறுகள் செய்பவர்களை காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் எனவும், அவர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
காவலர்களுக்கு பாராட்டு
தொடர்ந்து பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கரோனா தொற்று காலத்தில் காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றினர், காவல் துறையினரின் பங்களிப்பை உணர்ந்து உறுதுணையாக இருந்து வரும் அனைவருக்கும் சென்னை காவல்துறை சார்பில் தனது நன்றியை தெரிவித்தார்.
இதையும் படிங்க :அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு