சென்னை நகரில் கரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி, சுகாதாரத்துறை, காவல்துறை உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாநிலம் முழுவதும் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கும் கரோனா பரவி வருகிறது.
குறிப்பாக, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து, ஆயுதப்படை, தீயணைப்புத்துறை, ரயில்வே, ஊர்காவல் படை என அனைத்துத் துறை காவலர்களுக்கும் தொற்று ஏற்பட்டு வருகிறது.
சென்னையில் மட்டும் கூடுதல் ஆணையர் உள்பட சுமார் 146 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், இன்று புதிதாக மூன்று காவலர்களுக்கு கரோனா பரவியுள்ளது. பாதுகாப்பு காவலர்களாக பணியிலிருந்த 26 மற்றும் 36 வயதுடைய இரண்டு காவலர்களுக்கும், புளியந்தோப்பு காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேசம் செல்ல முயன்ற 40 தொழிலாளர்கள் மீட்பு!