சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் தொடர்ந்து நுரை தேங்குவதால் நேற்றைய முன்தினம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு நுரை நீரை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் நுரை தேங்குவதற்கான காரணம் தெரிய வரும் என்று மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில் பட்டினப்பாக்கம் கடற்கரையில் இன்றும் அதிகளவு நுரை தேங்கியுள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் சிறுவர்கள் அந்த நுரையில் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.
நுரை தேங்குவது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பிரபாகரன் கூறுகையில், கடற்கரையில் இவ்வாறு நுரை தேங்குவுது இயலப்பான ஒன்றுதான். சிவப்பு பழுப்பு நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் நுரைகள் கடற்கரையில் உருவாகக்கூடும். கடல் உள் இருக்கும் செடிகள், மீன்களால் கரையோரம் அடித்துவருவதால் உருவாகுவது சிவப்பு பழுப்பு நிறம் நுரைகள். இது பொதுவாக அனைத்து நாடுகளிலும் உருவாகக்கூடும்.
சுங்கச்சாவடியை தகர்த்தெறிந்த லாரி - இருவர் பலியான சோகம்
அதேபோல் கடல் உள் இருக்கும் சிங்கள் செல் அல்கெய் (Single cell algae) கடற்கரைக்கு வருவதின் மூலம் உருவாவது தான் வெள்ளை நிறநுரைகள் ஆகும் என தெரிவித்தார். இதனால் இயற்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் இதே வெள்ளை நுரைகளோடு மனிதர்களால் உருவாக்கப்படும் கழிவுகள் கலக்கப்பட்டால், அது நச்சுதன்மை வாய்ந்த நுரையாக மாறி மூன்று முதல் நான்கு நாட்கள் தங்கி இயற்கை மற்றும் கடல் உயிரினங்களுக்கு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
அடையாறு கழிவுகள் கடலோடு கலக்கப்படுவதும், தொழிற்சாலைகளின் கழிவுநீர்களை கடலோடு கலப்பதால் தான் தற்போது சென்னை கடற்கரையில் மூன்றுநாட்களாக இந்த வெள்ளை நுரை தென்படுகிறது. இதற்கு தீர்வு கடல் நீரோடு, கழிவு நீர் கலப்பதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.