சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் தண்டுரை பேருந்து நிலையம் அருகே 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரச மரம், புங்க மரம் இருந்து வந்தன.
இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் சட்ட விரோதமாக மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர். பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த மரங்களை வெட்ட அகற்றியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, 100க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் சாலை மறியல் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டாபிராம் காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மேலும் படிக்க: நாடாளுமன்ற மறுசீரமைப்பு திட்டத்தில் ஒரு மரம்கூட வெட்டப்படாது - மத்திய அமைச்சர் உறுதி!