ETV Bharat / city

ஜவாத் புயல் எச்சரிக்கை - TN Weather

ஜவாத் புயல் காரணமாக வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜவாத் புயல், Jawad cyclone effects in Tamil Nadu
ஜவாத் புயல்
author img

By

Published : Dec 3, 2021, 1:13 PM IST

Updated : Dec 3, 2021, 2:12 PM IST

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தென் தமிழ்நாடு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று (டிசம்பர் 3) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (டிசம்பர் 4) இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 5ஆம் தேதி நிலவரம்

  • சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
  • தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
  • வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 6ஆம் தேதி: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

டிசம்பர் 7ஆம் தேதி: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். மேலும், டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகாலை நேரங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை நிலவரம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

ஜவாத் புயல் எச்சரிக்கை

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோர பகுதியை நாளை (டிசம்பர் 4) காலை நெருங்ககூடும். அதனை தொடர்ந்து வடக்கு - வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரை ஒட்டி நகரும்.

இதன் காரணமாக, இன்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

டிசம்பர் 4ஆம் தேதி: மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்திலும், இடையிடையே 100 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

டிசம்பர் 5ஆம் தேதி: மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்திலும், இடையிடையே 80 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: Cyclone Jawad: அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெறும் புயல்; பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

Last Updated : Dec 3, 2021, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.