சென்னையிலிருந்து லண்டனுக்கு பிரிட்டீஷ் ஏா்லைன்ஸ் விமானம் இன்று காலை 7.25-க்கு சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டும்.
அந்த விமானத்தில் லண்டன் செல்ல மத்திய அரசின் சிறப்பு அனுமதிபெற்ற இந்தியா்கள், NRI எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியா்கள் உள்பட 147 பயணிகள் அதிகாலை 4 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையம் வந்துவிட்டனா்.
அவா்கள் அனைவரும் அனைத்துவிதமான சோதனைகளும் முடிந்து விமானத்தில் ஏறி அமா்ந்தநிலையில், விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு 5 நிமிடங்கள் முன்னதாகவே 147 பயணிகள், 14 விமான ஊழியா்கள் என மொத்தம் 161 பேருடன் புறப்பட்டு ஓடுபாதையில் ஓடத்தொடங்கியது. அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.
இந்த நிலையில் விமானம் வானில் பறப்பது பெரும் ஆபத்து என்பதை உணா்ந்த விமானி உடனடியாக விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்திவிட்டு விமான கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து விமானத்தை இழுவை வாகனங்கள் மூலம் இழுத்துக் கொண்டுவந்து விமானம் நிற்கவேண்டிய இடத்தில் நிறுத்தினா். பின்பு பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, ஓய்வு அறைகளில் தங்கவைக்கப்பட்டனா்.
விமானத்தைப் பழுதுபார்க்கும் பணியில் பொறியாளா்கள் ஈடுபட்டனா். ஆனால் உடனடியாகச் சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே நின்ற மாற்று பிரிட்டீஷ் ஏா்லைன்ஸ் விமானத்தில் பயணிகளை அனுப்பிவைக்க முடிவு செய்தனா்.
இந்த மாற்று விமானம் இன்று பிற்பகலில் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கணடுபிடித்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, நல்வாய்ப்பாக 161 போ் உயிர் தப்பினா். இந்தச் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.