ETV Bharat / city

நானோ அல்லது என் மகளோ பள்ளியை நிர்வகிக்கவில்லை - ஒய்.ஜி. கொடுத்த ஜெர்க்! - ஒய் ஜி மகேந்திரன்

தானோ, தன் மகளோ பிஎஸ்பிபி பள்ளியை நிர்வகிக்கவில்லை என ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் புகார் குறித்து ஒய்.ஜி. மகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.

psbb school teacher rajagopalan sexual harassment issue

author img

By

Published : May 24, 2021, 3:35 PM IST

சென்னை: பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து அப்பள்ளியின் புரவலர்களுள் ஒருவரான ஒய்.ஜி. மகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், 'சென்னை கே.கே. நகரில் அமைந்துள்ள பிஎஸ்பிபி பள்ளியில் பணியாற்றும் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகிகளுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தரப்பிலிருந்து ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் என்னுடைய கவனத்திற்கு வந்தவுடன் பள்ளி நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன். அதில் மாணவர்கள் பாதிக்காத வகையில், உரிய முறையில் விசாரணை நடத்தி, ஆசிரியர் மீது தவறு இருந்தால் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.

தனியார் பள்ளி ஆசிரியரின் சேட்டைகள் - போர்க்கொடி தூக்கிய முன்னாள் மாணவர்கள்

தன் தாயார் உருவாக்கிய பள்ளிக்கு எவ்விதமான அவப்பெயரும் ஏற்படாத வகையில் பள்ளி நிர்வாகம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன். மேலும், பள்ளியை நிர்வகிப்பதில் தனக்கோ; தன் மகளுக்கோ எவ்விதமான பங்கும் இல்லை' என்று தெளிவுபடத் தெரிவித்துள்ளார்.

இச்சூழலில், சென்னை கே.கே. நகர் பிஎஸ்பிபி பள்ளியின் தாளாளர் ஷீலா ராஜேந்திரன், பெற்றோர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இது மாதிரியான புகார்கள் கடந்த காலங்களில் தங்களின் கவனத்திற்கு வரவில்லை என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.