ETV Bharat / city

Chennai Rain Update: கே.கே.நகர் புறநகர் மருத்துவமனையில் புகுந்த மழைநீர்

கே.கே. நகர் புறநகர் மருத்துவமனையில் நீர் புகுந்ததால் அங்கிருந்த நோயாளிகள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

கேகே நகர் புறநகர் மருத்துவமனையில் புகுந்த மழைநீர்

author img

By

Published : Nov 11, 2021, 8:43 PM IST

சென்னை: கடந்த 4 நாட்களாக கொட்டித் தீர்த்த கன மழையால் சென்னையின் கே.கே. நகர், அசோக் நகர், விருகம்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

கே.கே. நகர் புறநகர் மருத்துவமனை அமைந்துள்ள சாலை முழுவதும், நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. சாலையில் வழிந்தோடிய நீர் புறநகர் மருத்துவமனைக்குள் நுழைந்ததால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு ஆகியோர் மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்தனர்.

மேலும், அங்கு சிகிச்சைப் பெற்று வந்த ஐந்து நோயாளிகளில் குணமடைந்த மூன்று பேரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

கே.கே. நகர் புறநகர் மருத்துவமனையில் புகுந்த மழைநீர்

இரண்டு நோயாளிகளை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் தேங்கியிருக்கும் நீரை, மின் மோட்டார் கொண்டு அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: Chennai Rains - குட்டித்தீவு போல் காட்சியளிக்கும் தாம்பரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.