சென்னை: தமிழ்நாட்டில் “நான் முதல்வன்” திட்டத்தின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு உதவிட சென்னை ஐஐடி தயாராக இருக்கிறது என அதன் இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.
கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஆக.29) “நான் முதல்வன்” திட்டத்தின்கீழ் மாபெரும் திறன் மேம்பாட்டுத்திட்டம், நான் முதல்வன் திறன் மேம்பாட்டுப்பயிற்சித்திட்டத்தின் இணையதளத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், மாணவர்களுக்குப்பயிற்சி அளிக்க உள்ள 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, 'தமிழ்நாடு தொழிற்புரட்சி 4.0-யை நோக்கிய பயணம் செய்து கொண்டிருக்கிறது. சரியான நேரத்தில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான இந்த திட்டத்தை தொடங்கிய தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகள்.
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் முன்மாதிரியாக திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி பெருமைமிக்க தருணம் இது. திட்டம் வெற்றியடைய வேண்டும். இந்தத் திட்டத்துக்கு உதவிட சென்னை ஐஐடி தயாராக உள்ளது. இந்தத் திட்டத்தை தொடங்கிய முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: GATE தேர்வு எழுதுவதற்கு கட்டணமின்றிப் படிக்கும் வகையிலான இணையதளம் சென்னை ஐஐடியில் தொடக்கம்