ETV Bharat / city

வேகமெடுக்கும் கரோனாவிற்கு இடையே வரும் ஜன.19இல் அரசு மருத்துவர்கள் தர்ணா! - சென்னை செய்திகள்

வேகமெடுக்கும் கரோனா தொற்றுகளுக்கு இடையே அரசு மருத்துவர்கள் ஊதியம், கரோனா பேரிடரில் ஓய்வின்றி பணியாற்றி தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு நிவாரணம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

மருத்துவர்கள் தர்ணா
மருத்துவர்கள் தர்ணா
author img

By

Published : Jan 17, 2022, 5:06 PM IST

சென்னை: கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் 19ஆம் தேதி புதன்கிழமை அரசு மருத்துவர்கள் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்த பிறகும் அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கையை அரசு நிறைவேற்ற மறுத்து வருவதால், கடந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி மதுரையில் தர்ணா போராட்டம் நடத்தினோம்.

அடுத்து நவம்பர் 10ஆம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்ள இருந்த நிலையில், அமைச்சரின் மீது நம்பிக்கை வைத்து நாம் போராட்டத்தை ஒத்தி வைத்தோம்.

அரசு மருத்துவர்கள் ஊதிய கோரிக்கை

போராட்டத்தை ஒத்தி வைத்து 2 மாதங்களுக்கு பிறகும், நியாயமான ஊதிய கோரிக்கையை நிறைவேறாததால், சட்ட போராட்டக் குழு (Legislative Coordinating Commission) சார்பில் மீண்டும் போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். வரும் 19 ஆம் தேதி புதன்கிழமை சென்னை MMC Dean Pillar அருகில் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம்.

வேகமெடுக்கும் கரோனா, ஒமைக்ரான் தொற்றுகளிடையே அரசு மருத்துவர்கள் போராட்டம் அறிவிப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பேரிடரில் ஓய்வின்றி பணியாற்றி வரும் உயிர்காக்கும் மருத்துவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை என்ற கோபமும், வேதனையும் ஒவ்வொரு மருத்துவரிடத்தும் அதிகமாகவே உள்ளது.

ஏற்கனவே, பேச்சுவார்த்தையின் போது கோரிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த அமைச்சர், இதனால் துறைக்குக் கெட்ட பெயர் தான் ஏற்படும் எனத் தெரிவித்தார். இருப்பினும் இதுவரை கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை.

அரசு மருத்துவர்கள் போரட்டம்

இந்த நிலையில் தற்போது கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு நிவாரணம் வேண்டி, அரசு மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது, நிச்சயமாக துறைக்கு மட்டுமல்ல, அரசுக்கே பெரிதும் அவமானமாகக் கருதப்படும் என கருதுகிறோம்.

சுகாதாரத் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என அரசு தொடர்ந்து பெருமையாகக் கூறுகிறது. அதேநேரத்தில், இங்கு அதற்கான பங்களிப்பைத் தரும் அரசு மருத்துவர்கள் உரிய ஊதியம் வேண்டி, போராடுவதைக் கௌரவமாகச் சொல்ல முடியாது எனக் கருதுகிறோம்.

முதலமைச்சர் கவனம் தேவை

கரோனாவுக்கு எதிரான போரில் தமிழ்நாட்டின் பலமாக இருப்பது 18ஆயிரம் அரசு மருத்துவர்கள் தான் என்பது நம் முதலமைச்சருக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் தங்களுக்கு உரியச் சம்பளம் வேண்டி, மருத்துவர்கள் போராடுவதைத் தமிழ்நாடு பெருமையாகச் சொல்ல முடியாது.

கர்நாடகாவில் கரோனா முதல் அலையின் போது, மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்குவதற்கு முன்னரே, அரசு மருத்துவர்களின் சேவையை அங்கீகரித்து, அங்கு ஊதிய கோரிக்கையை நிறைவேற்றினர். ஆனால், இங்கு மட்டும் தொடர்ந்து அரசு மருத்துவர்களைப் போராட வைப்பதைச் சாதனையாகச் சொல்ல முடியாது எனக் கருதுகிறோம்.

எனவே, வரும் 19ஆம் தேதி நடத்தும் தர்ணா போராட்டம் நிச்சயம் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும். 12ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத நான்கு கோரிக்கைகள் உள்ளிட்டவைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என உறுதியாக நாம் நம்புகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அதில் அரசே!

டாக்டர் கருணாநிதியின் அரசாணையை உடனே நிறைவேற்றவும். காப்போம்! காப்போம்! கரோனாவிடமிருந்து மக்களைக் காப்போம்!, 'நோயாளிகள் நலனும், மருத்துவர் நலனும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்'. வேண்டும்! வேண்டும்!, DACP PAY with PAY BAND 4 @ 12 yrs வேண்டும்! எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வடசென்னையில் 15 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.