ETV Bharat / city

சென்னையில் விட்டுவிட்டு மழை தொடரும்! - சென்னை மழை

சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain
rain
author img

By

Published : Oct 29, 2020, 1:57 PM IST

இது தொடர்பாக தென்மண்டல வானிலை மையத் தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள காட்சிப்பதிவில், “ வட தமிழகம், தெற்கு ஆந்திர கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழையும், ஒரு சில இடங்களில் மிகக் பலத்த மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக டிஜிபி அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் 18 செ.மீ., கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் 14 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மற்றும் தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னையில் விட்டுவிட்டு மழை தொடரும்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடைவெளிவிட்டு ஆங்காங்கே மழை தொடரும் “ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வெளுத்துக்கட்டும் பருவமழை: புகார் தெரிவிக்க அவசர எண் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.