சென்னை: (Drunken Man attacked Police)சென்னை கொடுங்கையூரில் மதுபோதையில் வாலிபர் ஒருவர் பொதுமக்களை அவதூறாக பேசி சண்டையிட்டு வருவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் வந்தன.
போதை ஆசாமி
அதன் அடிபடையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த பொழுது அங்கிருந்த போதை ஆசாமி போலீசாரை தகாத வார்த்தைகளில் பேசி தாக்கியுள்ளார்.
இதனால் போலீசார் போதை ஆசாமியை பிடித்து காவல் நிலையம் அழைத்துசென்று விசாரணை நடத்தினர்.விசாரனையில் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சுரேஷ்குமார்(29) என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போதை ஆசாமி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:பெண் பயணிகளுக்குத் தனி இருக்கைகள் - ரயில்வே அமைச்சர் அறிவிப்பு