ETV Bharat / city

ஓட்டுநருடைய குழந்தை புகைப்படத்தை பள்ளி பேருந்தில் வையுங்கள்... முதன்மைக் கல்வி அலுவலர்... - chennai school bus guidelines

சென்னையில் பள்ளி வாகனங்களை பராமரித்தல், பரிசோதனை செய்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார்.

chennai-deo-issued-guidelines-for-operating-school-vehicles-in-the-district

author img

By

Published : Mar 29, 2022, 1:32 PM IST

இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அனைத்து வகையான பள்ளிகளின் தளாளர்கள், முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில், பின்வரும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

  • பள்ளி வாகனங்களை முறையாக பராமரித்து ஆண்டுத்தோறும் மாேட்டார் வாகன ஆய்வாளரிடம் பரிசோதனைச் செய்து, புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
  • புதுப்பிக்கப்படாத பள்ளி வாகனங்கள், பேருந்துகளை இயக்கக்கூடாது.
  • கல்வித்தகுதி, முறையான பயிற்சி பெற்ற ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களை மட்டுமே பள்ளி வாகன ஓட்டுநர்களாக நியமனம் செய்ய வேண்டும்.
  • பள்ளி வாகனத்தில் மாணவர்களை கவனிக்க உதவியாளர் ஒருவர் நியமனம் செய்யப்பட வேண்டும்.
  • பள்ளி மாணவர்கள் வாகனத்தைவிட்டு இறங்கி தூரமாக சென்ற பின்னரே ஓட்டுநர்கள் மீண்டும் வாகனத்தை இயக்க வேண்டும். இதை பள்ளி நிர்வாகம் அவ்வப்போது உறுதி செய்துகொள்ள வேண்டும்.
  • பள்ளி வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் பாெருத்தப்பட்டிருக்க வேண்டும்.
  • வாகனம் ஓட்டும் போது திரைப்பட பாடல்களை போட அனுமதிக்கக்கூடாது.
  • எந்த காரணத்தைக் கொண்டும் வாகனத்தில் அதிகப்படியான மாணவர்களை ஏற்றக்கூடாது.
  • எந்த மாணவரும் 20 முதல் 30 நிமிடங்களுக்கு மேல் பயணம் செய்யாத வகையில் வழித்தடங்கள் அமைக்கப்பட வேண்டும்.
  • ஓட்டுநருடைய குழந்தைகளின் புகைப்படம் ஓட்டுநர் இருக்கைக்கு எதிரில் பார்வையில்படும்படி வைக்கப்பட வேண்டும்.
  • வாகனங்களில் அவசரத் தேவைகளுக்கான முக்கிய தொலைபேசி எண்கள் எழுதி வைக்கப்பட வேண்டும்.
  • பள்ளிப் பேருந்துகளில் பள்ளியின் பெயர் பெரிய எழுத்துகளில் எழுதி வைக்கப்பட வேண்டும். குறிப்பாக பள்ளியின் பெயரிலேயே பேருந்து இருக்க வேண்டும்.
  • பேருந்துகளை பள்ளி தொடங்கும் நேரத்திற்கேற்ப இயக்க வேண்டும்.
  • எந்தவொரு பள்ளி வாகனத்தையும் மாணவர்கள் பயணம் செய்யாமல் பயன்படுத்தக் கூடாது.
  • தனியார் பள்ளி பேருந்திற்கான அனுமதி 5 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும். பள்ளியின் அங்கீகாரம் மீண்டும் புதுப்பித்தால் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும். பள்ளிப் பேருந்து ஓட்டுநரும் அதற்குரிய உரிமத்தை புதுப்பித்து பெற்றிருக்க வேண்டும்.
  • பள்ளிகளில் நியமிக்கப்படும் ஓட்டுநருக்கு பள்ளி பேருந்தை 5 ஆண்டுகள் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும். குறிப்பாக ஒட்டுநர்கள் மீது சிவப்பு விளக்கு விதி மீறல், தடம் மாறி ஒட்டுதல், வேறு நபரைக் கொண்டு ஒட்டுதல் போன்ற கார்கள் இரு தடவைக்கு மேல் இருக்கா வண்ணம் நியமனம் செய்யப்பட வேண்டும்.
  • அதிவேகத்தில் வாகனத்தை ஒட்டுதல், மது அருந்திவிட்டு ஓட்டுதல், உயிர் சேதம் விளைவிக்கும் வகையில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஒட்டுதல் உள்ள செயல்களிலும் ஈடுபடாத ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும்.
  • சாலை விதிகளை மதித்து, வழிமுறைகளை பின்பற்றி வாகனங்களை ஓட்ட ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரம் - காது கேளாத வாகன ஓட்டுநரால் நேர்ந்த விபத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.